உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான வாரன் பஃபெட்டின் 90 வது பிறந்தநாளுக்கு தானே கேக் தயாரித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், 30 வயதானவர்களின் மன கூர்மையையும், 10 வயது குழந்தையின் குறும்பு சிரிப்பையும் 6 வயதுடையவர்களின் உணவு பழக்கத்தையும் வாரன் கொண்டிருப்பதாக பாராட்டி உள்ளார்.
மேலும், அலுவலகத்தில் இருந்து தான் அதிகம் டயல் செய்த தொலைபேசி எண்களில் ஒன்று மனைவி மெலிண்டாவுடையது மற்றொன்று வாரனுடையது என்றும் வலைதள பக்கத்தில் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.