இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பென்னிகுயிக்கின் கல்லறை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்ட மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் பென்னி குயிக். இவரின் இந்த அரிய செயலை என்றும் நினைவு கூறும் வகையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லண்டனில் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் உள்ள அவரது கல்லறை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.