ஐரோப்பிய நாடான பெலாரசில் அதிபர் பதவி விலகக் கோரி நடந்து வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
தலைநகர் மின்ஸ்க்கில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பழைய தேசியக்கொடி அரசாங்க எதிர்ப்பு அடையாளமாக மாற்றி போராடி வருகின்றனர்.
அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ பதவி விலகக் கோரி நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நடந்த போராட்டத்தின் போது அத்துமீறி நுழைந்த காரை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி தாக்கினர்.
இந்த நிலையில் போராட்டத்தின் நடுவே இளைஞர் ஒருவர் தனது காதலை, தோழியிடம் வெளிப்படுத்த அதனை அவர் ஏற்றுக் கொண்டதால் அங்கிருந்த ஏராளமானோர் கைதட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.