கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் அந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தென் கொரியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் பீதி உருவானது.
ஆனால் அவை உடலுக்குள் இருக்கும் இறந்த வைரஸ் மூலம் உருவான பாஸிட்டிவ் முடிவுகள் தான் என்றும் இவற்றால் அந்த நபர்களுக்கோ அவர்களால் பிறருக்கோ எந்த பாதிப்பும் இருக்காது என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதித்த நபருக்கு உடலில் செலுத்தப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி ஓரிரு மாதங்களுக்குப் பிறகு குறையத் தொடங்கிவிடும் என்பதால் அதன் பின் மீண்டும் கொரோனா பாதிக்கும் என்ற நிலவிய அச்சத்தை விஞ்ஞானிகள் போக்கியுள்ளனர்.