செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பெண் கொசுக்களை உறவாடி ஏமாற்றும் மலட்டுத்தன்மையுள்ள ஆண் கொசுக்கள்... டெங்குவை ஒழிக்க சிங்கப்பூர் புது முயற்சி!

Aug 28, 2020 07:29:21 PM

ரபணு மாற்றப்பட்ட, மலட்டுத்தன்மையுள்ள ஆண் கொசுக்களைக் காற்றில் பரவவிட்டு டெங்கு, ஜிகா போன்ற கொடிய நோய்களைப் பரப்பும் பெண் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளது.

மிகச்சிறிய தீவான சிங்கப்பூரில் மொத்தம் 57 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆனால், இங்கு ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மக்கள்  டெங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 26,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொசுக்களைக் கட்டுப்படுத்த புது முயற்சியில் இறங்கியுள்ளது சிங்கப்பூர்.

பொதுவாக, ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காது. முட்டைகளை உற்பத்தி செய்ய இரத்தம் தேவை என்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சி எடுக்கின்றன. பெண் கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் சமயத்தில்தான் டெங்கு, ஜிகா போன்ற வைரஸ் கிருமிகளையும் மனிதர்களுக்குப் பரப்புகின்றன. 



எனவே, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்தியை கையாண்டு வருகின்றன உலக நாடுகள். அதன்படி ஆண் கொசுக்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்படுகின்றன.  இந்தக் கொசுக்கள் வோல்பாசியா என்ற பாக்டீரியாவால் தாக்கச் செய்து மரபணு மாற்றப்பட்டு, மலட்டுத் தன்மையுள்ளதாக மாற்றப்படுகிறது. மரபனு மாற்றப்பட்ட  கொசுக்கள் காற்றில் விடப்பட்டு பெண் கொசுக்களுடன் பழக விடப்படுகின்றன. அப்போது, பெண் கொசுவுடன் மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசு உறவில் ஈடுபட்டாலும் முட்டை பொரிக்க முடியாது.

அதோடு, மலட்டுக் கொசுக்களின் உடலில் உள்ள புரதம் பெண் கொசுக்ளுக்குள் சென்று மனிதர்களைக் கடிக்கும் நிலையை அடையும் முன்பே அவற்றைக் கொன்றுவிடும். அப்படியே பெண் கொசுக்கள் முட்டையிட்டாலும் அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்காது. ஆனால், பூக்களிலுள்ள தேனை மட்டுமே அருந்தும் ஆண் கொசுக்கள் தொடர்ந்து வாழ்ந்து அதன் மரபணுக்களைப் பரப்பிக்கொண்டே இருக்கும். இந்த முறையின் மூலம், காலப்போக்கில் ஆபத்தை ஏற்படுத்தும் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களின் அளவைக் குறைத்து அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்ப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

சிங்கப்பூரைப் போலவே ஆஸ்திரேலியா நோய்களைப் பரப்பும் பெண் கொசுக்களைக் கட்டுப்படுத்த ஆய்வகத்தில் உருவான மலட்டுத் தன்மையுள்ள ஆண் கொசுக்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி தற்போது அமெரிக்காவும் 70 கோடிக்கும் அதிகமான கொசுக்களை ஆய்வகத்தில் வளர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.  

 


Advertisement
இலங்கை சிறையில் இருந்து நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
ஷானியா ட்வைன் பாடல்களால் ஈர்க்கப்பட்ட நாயின் நுரையீரலில் இருந்த 5 செ.மீ புல்
ரஷ்ய தலைநகரம் மாஸ்கோ மீது மீது 30 டிரோன்கள் தாக்கியதில் கட்டடங்கள், வாகனங்கள் சேதம்
ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்ற செயல் - அதிபர் புதின்
பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் சாகச வீரர் விபத்தில் உயிரிழப்பு..
தெற்கு கரோலினாவில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்... தேடுதல் வேட்டையில் 2,000 ஊழியர்கள்
அமெரிக்கா சாலைகளில் பனி மூடியதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தம்
கியூபாவில் ரபேல் புயல் தாக்கியதில் கடும் சேதம்

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement