கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க, 6 அடி இடைவெளி என்பது போதுமானது என்று வரையறுக்க முடியாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பான புதிய ஆய்வுகள் பிரிட்டன் மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 6 அடி இடைவெளி என்பது ஆரம்பம் தான், அதை விட கூடுதலாக இடைவெளி விடுவதே சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றோட்டம் கொண்ட பகுதிகள், மூடப்பட்ட அறைகளில் கூடுதல் இடைவெளியே சிறப்பானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.