அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகைக்கு வெளியே ஒலி எழுப்பி நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் இன மற்றும் நிற வெறிக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், மக்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை அதிபர் ட்ரம்புக்கு நினைவுப்படுத்தும் பொருட்டும் குடியரசுக் கட்சி தேசிய மாநாட்டின் நேரலை ஒளிப்பரப்பில் கேட்கும் வகையிலும் ஒலிபெருக்கி, ஹாரன்கள், விசில்கள், வான வேடிக்கைகள் மூலமாக அதிக சப்தத்தை ஏற்படுத்தினர்.