புல்வாமா தாக்குதல் வழக்கில் என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முதல் நபராக குறிப்பிடப்பட்டுள்ள ஜெய்ஷே முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் அளித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.
டெல்லியில் இந்த குற்றச்சாட்ட கூறிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷே முகம்மது பொறுப்பேற்றுள்ளதை சுட்டிக்காட்டினார்.
அந்த அமைப்பும்அதன் தலைவனும் பாகிஸ்தானில் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அரசிடம் போதிய ஆதாரங்கள் அளிக்கப்பட்ட பிறகும் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்காமல், பாகிஸ்தான் நழுவுவதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.