ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார்.
சைபீரியாவில் இருந்து மாஸ்கோவிற்கு விமானத்தில் செல்லும் போது மயக்கமடைந்த ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, கோமா நிலையில் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அலெக்ஸி நவல்னிக்கு என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையான விசாரணைக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார், மேலும் நவல்னிக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சர்வதேச முயற்சிகளில் இங்கிலாந்து ஈடுபடும் என்றும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.