செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

சிகிச்சையே எடுக்காமல் ஹெச்.ஐ.வியை வீழ்த்திய முதல் நோயாளி - ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!

Aug 27, 2020 04:35:04 PM

1992 - ம் ஆண்டு ஹெச். ஐ.வி  வைரஸ் கிருமியால் தாக்கப்பட்ட அமெரிக்கப் பெண்மணி ஒருவர், எந்தவொரு சிகிச்சையும் மேற்கொள்ளாமல் அதிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்த அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இது ஹெச்.ஐ.விக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப் போராடி வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கையையும் வியப்பையும் அளித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கிறார், 66 வயதாகும் லோரீன் வில்லென்பெர்க் (Loreen Willenberg). இவருக்கு 1992 - ம் ஆண்டு ஹெச்.ஐ.வி நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு, கடந்த 28 ஆண்டுகளில் லோரீன் வில்லென்பெர்க்கின் உடல் வைரஸ் கிருமியை வெல்லும் அளவுக்கு அவரின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தது. வைரஸ் கிருமியை ஒடுக்கப் பழகியதால் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புகழ்பெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது வைரஸ் கிருமியை வென்று சாதித்துள்ளார் லோரீன் வில்லென்பெர்க்.

இதற்கு முன்பு, கலிபோர்னியாவைச் சேர்ந்த டிமோதி ப்ரௌன் (Timothy Brown), லண்டனைச் சேர்ந்த ஆடம் காஸ்டில்லெஜோ (Adam Castillejo) ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இரண்டு பேருமே புற்றுநோய்க்காக எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எலும்பு மஞ்சை மாற்றப்பட்ட பிறகு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் முழுவீச்சில் இயங்கி வைரஸை அழித்தது. ஆனால், லோரீன் வில்லென்பெர்க் எந்தவித அறுவை சிகிச்சையும், ஹெச்.ஐ.வி க்கு எதிராக எந்தவொரு ஆண்டிவைரல் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளாமல் குணமடைந்துள்ளது ஆராய்ச்சியாளர்களை வியப்படையச் செய்துள்ளது. 

ஆஸ்திரேலியா, மெல்போர்னில் இயங்கும் பீட்டர் டோஹெர்டி தொற்று நோய் மற்றும் நோய் எதிர்ப்பு நிறுவனத்தின் (Peter Doherty Institute for Infection and Immunity) இயக்குனரான மருத்துவர் ஷரோன் லெவின், “சிகிச்சை பெறாமலே ஹெ.ஐ.வி தொற்றிலிருந்து ஒருவர் குணமடைந்திருப்பது மிகவும் புதுமையானதாக உள்ளது. இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாகும். ஹெச்.ஐ.வி.யுடன் வாழும் 37 மில்லியன் மக்களுக்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதைக் கண்டுபிடிப்பதில் தான் ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையான சவாலாக இருக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் ஹெ.ஐ.வி வைரஸ் கிருமிக்கு எதிராகப் போராடி வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு  லோரீன் வில்லென்பெர்க் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.


Advertisement
காலநிலை மாற்றம் என்பதே ஒரு மிகப்பெரிய மோசடி : டிரம்ப்
கூகுள் நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ஹாலோவீன் திருவிழா
5ஆம் தேதி நடக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் .! கமலா ஹாரிஸ் - டிரம்ப் இடையே போட்டி..
கல்லறைத் திருநாளை முன்னிட்டு லண்டனில் நடைபெற்ற முகமூடி மல்யுத்தம்.!
அமெரிக்க நாடான கவுதமாலாவில் முன்னோர்களின் இறப்பு நாள் கொண்டாட்டம் .!
ரஷ்யாவுக்கு எதிரான போரை நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி.!
22 நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐ.நா. ஏஜென்சி எச்சரிக்கை.!
பிரேசிலில் முன்னாள் காவல் துறை அதிகாரிகளுக்கு 78 ஆண்டு சிறைத் தண்டனை..
ஜப்பானில், மரத்தால் ஆன செயற்கைக்கோளை நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டம் .!
ரஷ்யாவை கண்டித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.!

Advertisement
Posted Nov 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓவர்.. ஓவர் .. போதை.. ஓவர்.. போலீஸ்கிட்ட வம்புச் சண்டை.. சட்டையும்.. வண்டியும் போச்சு..! போதையன்ஸ் தீபாவளி அட்ராசிட்டி

Posted Nov 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் வெடித்த ஏர் பேக்.. பலியான மாணவன்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன உயிர்

Posted Nov 01, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்


Advertisement