இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆறு மாதங்களில் பதவியில் இருந்து விலகுவதாக வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கொரோனாவிலிருந்து விடுபட திணறுவதால், ஆறு மாதங்களில் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமரின் ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ்-ன் மாமனார் ஹம்ப்ரி வேக்ஃபீல்ட் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வடக்கு டெவானில் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்ட பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன் தன்னை பொருத்தவரை தாம் பதவி விலகுவதாக கூறப்பட்ட கருத்து முழுமையான முட்டாள்தனம் எனக்கூறியுள்ளார்.