செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பணத்தைத் திருடும் வைரசுடன் விற்பனைக்கு வரும் சீன ஸ்மார்ட் போன்கள் - மக்களே உஷார்!

Aug 26, 2020 12:00:56 PM

சிறந்த அம்சங்கள் மற்றும் மலிவான விலைக்குப் பெயர் போனவை சீன மொபைல் போன்கள். அதனால், ரியல்மி, ரெட் மி, ஹூவாய் உள்ளிட்ட சீனத் தயாரிப்பு ஸ்மார்ட் போன்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனாலும், சீனாவின் ஹூவாய் போன்கள் மற்றும் சீன செயலிகள் தகவல்களைத் திருடுகின்றன எனும் குற்றச்சாட்டு நெடு நாள்களாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் தரவுகளையும். பணத்தையும் திருடும் வகையில் மால்வேர்கள் நிறுவப்பட்ட சீன மொபைல்கள் விற்பனைக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
டிரான்ஷன் ஹோல்டிங்க்ஸ் என்ற சீன நிறுவனத்தின் மொபைல் பிராண்டான டெக்னோW2 என்ற போனில் xHelper,Triada என்ற இரண்டு வகையான மால்வேர்கள் (வைரஸ்கள்)  நிறுவப்பட்டு இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆய்வு நடத்திய Secure-D என்ற மோசடிகளைக் கண்டறியும் நிறுவனம் டெக்னோ போன்களில் மால்வேர் இருப்பதைக் கண்டறிந்து உறுதிப் படுத்தியுள்ளது. மொபைல் பேங்கிங் தகவல்கள், பாஸ்வேர்டு, கட்டண சேவைகள் உள்ளிட்ட தகவல்களைத் திருடும் வகையில் ரகசியமாக இந்த வகை மால்வேர்கள் மொபைலில் நிறுவப்பட்டுள்ளன. 
 
மொபைல் போன்களில் மால்வேர்கள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள டிரான்ஷன் நிறுவனம், “உதிரி பாகங்களை சப்ளை செய்தவர்களின் கைங்கரியமாக இருக்கலாம். மொபைல் போன்களில் மால்வேர்களை நிறுவுவதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை” என்று கூறியுள்ளது. 
 
டெக்னோ போன்களில் உள்ள xHelper,Triada மால்வேர்கள் அல்காடெல் மொபைல்களில் இருப்பதாகவும்  Secure-D கூறியுள்ளது. அல்காடெல் மொபைல் போன்கள் பிரேசில், மியான்மர் நாடுகளில் பிரபலமாக விற்கப்பட்டாலும் இந்தியாவில் விற்பனையாவதில்லை என்பது சற்றே ஆறுதலான செய்தி. ஆனால், டெக்னோ போன்கள் இந்தியாவில் மலிவு விலையில் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது!
 


Advertisement
தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?
விண்வெளியில் உயிரியல் தொடர்பாக 90 ஆய்வுகளை மேற்கொண்ட சீனா.!
தொலைநோக்கி தொடர்பான ஆர்வலர்களுக்கு தொழில் நுணுக்கம் குறித்தும் கற்பிக்கிறார் ஆப்டிகல் டிசைனர்.!
அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனப் பேரணி
அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் - டிரம்ப் உறுதி
ஹெஸ்பொல்லா மூத்த நிர்வாகியை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்
ஸ்பெயினில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய விமானப்படை
ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் சிறை, அபராதம்
காலநிலை மாற்றம் என்பதே ஒரு மிகப்பெரிய மோசடி : டிரம்ப்
கூகுள் நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ஹாலோவீன் திருவிழா

Advertisement
Posted Nov 05, 2024 in சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!


Advertisement