வியட்நாமில் முதியவர் ஒருவர் 16 அடி நீளத்துக்கு தலைமுடி வளர்த்து உள்ளார். மெகாங் பகுதியை சேர்ந்த அந்த முதியவரின் பெயர் நிகியான் வான் சியன் ஆகும்.
92 வயதாகும் அவர், கடந்த சுமார் 80 ஆண்டுகளாகவே முடியை வெட்டாமல் உள்ளார். இதனால் தலைமுடி கடினமாகி 16 அடி நீளத்துக்கு வளர்ந்து காட்சியளிக்கிறது.
மிக நீளமான அந்த முடியை சுருட்டி தனது தலையை சுற்றி முதியவர் சியன் கட்டியுள்ளார். தலைமுடியை வெட்டினால் இறந்து விடுவோம் என கருதியதாகவும், அதனால் வெட்டாமல் விட்டு விட்டதாகவும் முதியவர் சியன் கூறியுள்ளார்.