ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் ஆய்வு குறித்த போதிய முடிவுகளை விஞ்ஞானிகள் உரிய நேரத்தில் சமர்ப்பித்தால், இந்த ஆண்டுக்குள் தடுப்பூசிக்கு உரிமம் வாங்கப்படும் என தடுப்பூசி குழுவின் இயக்குநர் ஆண்ட்ரூ பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர்,தடுப்பூசியின் கிளினிகல் முடிவுகள் சேகரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், முடிவுகளை முழுமையாக மதிப்பீடு செய்யும் பணி துவங்கும் என கூறினார்.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல்கட்ட மனித சோதனையில், அது நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனிடையே, அதிபர் தேர்தலை முன்னிட்டு அமெரிக்காவில் இந்த தடுப்பூசிக்கு விரைவு ஒப்பதல் வழங்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.