செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கிம் ஜாங் உன்னுக்கு என்னவாச்சு.... வட கொரியாவின் முதல் பெண் அதிபராகிறாரா கிம் யோ ஜாங்?

Aug 25, 2020 01:57:08 PM

டகொரியாவின் அதிபரும் சர்வாதிகாரியுமான கிம் ஜாங் உன்னின் உடல் நிலை குறித்த மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அளவுக்கு அதிகமாக மாமிசம் மற்றும் மது சாப்பிட்டதால் அவரது உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது, கிம் ஜாங் உன் கோமாவுக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.  சமீப காலமாக, வடகொரிய அதிபர் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என்று தென்கொரியாவைச் சேர்ந்த புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. 



இந்த நிலையில், தென்கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின், “வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார். அதனால், வட கொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று கூறியது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வடகொரிய விவகாரங்களைக் கவனித்துவரும் சர்வதேச நிபுணர்களும் கிம் இறந்திருக்கலாம் என்றே கருதுகிறார்கள். கிம் ஜான் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் இறந்து சில மாதங்களுக்குப் பின்னர் தான் அவரின் இறப்பு குறித்து முறையாக அறிவிக்கப்பட்டது. அதைப் போலவே அடுத்த வடகொரிய அதிபராக கிம் யோ ஜாங் பதவியேற்கும் போது கிம் ஜான் உன்னின் உடல் நிலை குறித்த செய்தி முறையாக அறிவிக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள். தனது இரண்டு சகோதரர்களை ஓரம்கட்டிவிட்டு இளையவரான கிம் ஜான் உன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது. 



வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் ஒரு தங்கையும் உண்டு. அவர்களின் பெயர் கிம் ஜாங் நம் மற்றும் கிம் ஜாங் சோல். இதில்,  2017-ம் ஆண்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிம் ஜாங் நம் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவரான கிம் ஜாங் சோல் அரசியலில் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. கிட்டார் கலைஞரான இவர், எரிக் கிளாப்டன் இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு இவர் வடகொரியாவுக்குத் திரும்பினார். ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இவருக்கு வடகொரியாவில் செல்வாக்கு இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கிம் ஜாங்குக்கு குழந்தைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் புகைப்படங்கள் இதுவரை பொது வெளியில் வந்தது இல்லை. குழந்தைகள் சிறு வயது கொண்டவர்களாக இருப்பதால், ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் ஏற்கெனவே வடகொரியாவில் அதிகாரம் செலுத்திவரும் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் வடகொரியாவின் அதிகாரத்தைக் கைப்பற்றுவார் என்று கணிக்கப்படுகிறது. வடகொரிய மக்கள் இதுவரை பெண் ஆட்சியாளரைக் கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் இவருக்குத் தொடர்புகள் அதிகம் இருப்பதால், அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார் கிம் யோ ஜாங்.



தற்போதைய சூழலில், வட கொரியாவைப் பொருத்தவரை கிம்முக்கு அடுத்து சக்திமிக்க தலைவராகக் கருதப்படுபவர் கிம் யோ ஜாங். வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜொங் இல்லின் இளைய மகள் ஆவார். 1996 - ம் ஆண்டு முதல் 2000 - ம்  ஆண்டு வரை சுவிட்சர்லாந்தில் படித்தார். வடகொரியாவின் அதிகாரமிக்கத் தலைவர்களுள் ஒருவரான, ராணுவத் தலைமைத் தலைவர் சூ ரியாங் - ஹோவின் இரண்டாம் மகன் சூ சாங் என்பவரை 2015 - ம் ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார்.

2004 - ம் ஆண்டு முதல் வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினராகவும் 2014 - ம் ஆண்டு முதல் வட கொரியாவின் கொள்கை பரப்பு மற்றும் கிளர்ச்சித் துறையின் துணை இயக்குநராகவும் செயல்படுகிறார். வட கொரியாவின் அதிகாரம் மிக்க அமைப்பான வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், முக்கிய அரசியல் தலைவராகவும் உள்ளார். 

தற்போது வட கொரியாவின் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால் கிம் யோ ஜாங்கிடம் தான் அதிகாரங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 



ஒருவேளை, கிம் யோ ஜாங் மட்டும் வடகொரியாவின் அதிபரானால், அண்ணன், தந்தை மற்றும் தாத்தாவை விடவும் அதிக சர்வாதிகாரமிக்கவராக காட்டிக் கொள்வார் என்றும் சொல்கிறார்கள். 

கடந்த  1999 ம் ஆண்டுவாக்கில் தென்கொரிய விவகாரத்தைக் கவனித்துக் கொண்ட அமெரிக்க ராணுவ அதிகாரி டேவி மாக்வெல் கூறுகையில், “கிம் யோ ஜாங் எப்படி ஆட்சி செய்யப் போகிறார்  என்று தெரியவில்லை. இளம் வயதுடைய கிம் ஜாங் உன் பொறுப்பேற்ற போது அவரது தந்தையை விடவும் வடகொரியாவை வெளி உலகத்துக்குக் கொண்டுவருவார் என்று உலக நாடுகள் நம்பின. ஆனால், நடந்ததோ வேறு. தன் அண்ணனை போலவே கிம் யோ ஜாங்கும் சர்வாதிகாரியாகவே நடப்பார்''  என்று தெரிவித்துள்ளார். 

 


Advertisement
இலங்கை சிறையில் இருந்து நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
ஷானியா ட்வைன் பாடல்களால் ஈர்க்கப்பட்ட நாயின் நுரையீரலில் இருந்த 5 செ.மீ புல்
ரஷ்ய தலைநகரம் மாஸ்கோ மீது மீது 30 டிரோன்கள் தாக்கியதில் கட்டடங்கள், வாகனங்கள் சேதம்
ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்ற செயல் - அதிபர் புதின்
பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் சாகச வீரர் விபத்தில் உயிரிழப்பு..
தெற்கு கரோலினாவில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்... தேடுதல் வேட்டையில் 2,000 ஊழியர்கள்
அமெரிக்கா சாலைகளில் பனி மூடியதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தம்
கியூபாவில் ரபேல் புயல் தாக்கியதில் கடும் சேதம்

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement