அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு தொடர்ந்து கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரச்சாரக் குழு தெரிவித்துள்ளது.
ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜே பிடன், பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று மக்களை சந்தித்து வருகிறார். இதன்பொருட்டு,முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை தொடர்ந்து பின்பற்றி வரும் நிலையில், அவரின் சுகாதார நெறிமுறைகளை விரிவுப்படுத்தி உள்ளதாக ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரக் குழு அறிவித்துள்ளது.
அதன்படி பிடன், கமலா ஹாரிஸ், அவர்களுடன் தொடர்பில் உள்ள முக்கிய ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வைரஸ் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.