கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிளாஸ்மா சிகிச்சை என்பது சோதனைகுரியது மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு அதுவே முடிவானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சார்பில் பிளாஸ்மா சிகிச்சை அவசரகால பயன்பாடு என்று அறிவித்தது. ஆனால் பிளாஸ்மா திரவம் மூலம் சிகிச்சை அளிப்பது முடிவான விஷயம் அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதனை ஒரு பரிசோதனையாக மட்டுமே தாங்கள் பார்ப்பதாகக் கூறிய அவர், பரிசோதனை முறைகள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து உறுதியான ஆதாரங்களுக்காக காத்திருப்பதாகவும் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.