டொமினிகனில் லாரா புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் 3 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை சிறிய படகுகளில் தன்னார்வலர்கள் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
இசபெலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் பல இடிந்து விழுந்தன.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின் இணைப்பை இழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவர் இடிந்து விழுந்ததில் தாய், 7 வயது மகன் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.