சுமார் 157 கோடி ரூபாய் அளவிற்கு எச்-1பி விசா மோசடியில் ஈடுபட்டதாக, இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டனில் வசித்து வரும் ஒருவர் சமர்ப்பித்த விசா விவரங்களை ஆய்வு செய்ததில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் போலி என அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் 48 வயதான ஆஷிஷ் சாஹ்னி என்ற இந்தியர், 4 நிறுவனங்களின் பெயரில் போலியான விவரங்களை சமர்ப்பித்து, மோசடி செய்து எச்-1பி விசாக்களை பெற்று தருவது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் கடந்த 2011 முதல் 2016 வரையில் 157 கோடி ரூபாய் அளவுக்கு சாஹ்னி வருமானம் ஈட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆஷிஷ் சாஹ்னிக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.