புதிய பாலிஸ்டிக் ரக ஏவுகணை (ballistic missile), க்ருஸ் ரக (cruise missile) ஏவுகணையை ஈரான் அறிமுகபடுத்தியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளை மீறி, அந்த ஏவுகணைகளை ஈரான் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. அவற்றை வெளியுலகுக்கு ஈரான் தற்போது அறிமுகபடுத்தியுள்ளது. ஏவுகணைகள் சோதனை காட்சிகளையும் ஈரான் வெளியிட்டுள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை, தரையிலிருந்து பாய்ந்து சென்று 1400 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கும் வல்லமை உடையதாகும். க்ருஸ் ஏவுகணை 1,000 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கும் வலிமை கொண்டதாகும். பாலிஸ்டிக் ஏவுகணைக்கு அமெரிக்க தாக்குதலில் பலியான முன்னாள் தளபதி சுலைமானி பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.