அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான ஜனநாயகக்கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஜோ பிடன், நாட்டின் இருண்ட காலம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று உறுதியேற்றார்.
வட கரோலினா மாநிலத்தின் வில்மிங்டனில் நடைபெற்ற 4வது நாள் தேசிய மாநாட்டில், 32 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான பரிந்துரையை ஜோ பிடன் ஏற்றார்.
பின்னர், உரையாற்றிய அவர், அதிபர் ட்ரம்ப் எந்த பொறுப்பையும் ஏற்காமல், யாரையும் வழிநடத்தாமல், பிறரை குறைக் கூறுவதாகவும் கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியை மோசமான முறையில் கையாளுவதாகவும் விமர்சித்தார். இந்த அதிபர் தேர்தல், அமெரிக்காவின் மிக நீண்ட கால எதிர்காலத்தை தீர்மானிக்கும என்று பிடன் கூறினார்.