சீன கடல்பகுதியில் எண்ணெய் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. ஷாங்காய் அருகே கடல் பகுதியில் 3 ஆயிரம் டன் கேசோலின் (gasoline) ஏற்றி வந்த எண்ணெய் கப்பல், அங்கு வந்த சரக்கு கப்பலுடன் மோதியது.
இதில் சரக்கு கப்பல் உடைந்து கடலில் மூழ்கிய நிலையில், எண்ணெய் கப்பல் தீ பிடித்து பல அடி உயரத்துக்கு எரிந்து வருகிறது. அதிலிருந்த 3 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், 14 பேரை காணவில்லை. இதையடுத்து 14 பேரை தேடும் பணியும், எண்ணெய் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.