இந்தியா-சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக அரசு அதிகாரிகள் மட்டத்திலான புதிய சுற்று பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா இருதரப்பிலும் ஆழமான நட்பான உரையாடல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லைக் கோடு அருகே சீனப்படைகள் குவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்றமான சூழலால் உருவான முரண்பாடுகளை நீக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இந்தியாவும் சீனாவும் ஒப்புதல் அளித்துள்ளன.
எல்லையில் அமைதி நீடிக்கவும் இருதரப்பிலும் ஒருமித்த கருத்து நீடித்ததாகவும் அனுராக் ஸ்ரீவாத்சவா தெரிவித்துள்ளார்.