தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து வரும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என, சர்வதேச நாடுகளிடம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்கும் 5வது சர்வதேச மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய ஓம் பிர்லா, பாகிஸ்தானில் சுமார் 40 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதை அந்நாட்டு பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும், ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புகள் மட்டுமின்றி மும்பை மற்றும் நாடாளுமன்றம் மீதான தாக்குதல், உரி, புல்வாமா போன்ற தாக்குதல்களுக்கு காரணமான, பாகிஸ்தானை சேர்ந்த ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்றோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே, பாகிஸ்தானின் நிலைப்பட்டை விளக்குவதாக குற்றம் சாட்டினார்.