ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg, புதைபடிவங்களில் இருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளுக்கு தடை விதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதை வழி மொழிந்து, டைட்டானிக் கதாநாயகன் Leonardo DiCaprio உள்ளிட்ட 1 லட்சத்தி 25,000 பேர் கையெழுத்திட்ட மனுவை ஜெர்மனி அதிபரிடம் அளித்த Greta Thunberg, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விதமாக நடைபெறும் ஆய்வுகள் மற்றும் எரிபொருள் எடுக்கும் பணிகளில் ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்வதை நிறுத்த வலியுறுத்தும்படி அவர் கோரிக்கை வைத்தார்.