அதிபர் பதவியில் ஆர்வத்துடன் டொனால்ட் ட்ரம்ப் செயல்படாததால் அமெரிக்காவின் ஜனநாயகம் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளதாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் மாநாடு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா, 2017ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையை ஒப்படைத்தபோது, ஜனநாயகத்தின் மீது பயபக்தியுடன் ட்ரம்ப் செயல்படுவார் என்று எண்ணியதாகவும் ஆனால் அதை அவர் செய்ய தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடி, வேலைவாய்ப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அமெரிக்காவுக்கு இருந்த பெருமை குறைந்துவிட்டதாக ஒபாமா குற்றஞ்சாட்டினார்.