அபுதாபியில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட ‘ஸ்கை டைவிங்’ உள்ளரங்க வளாகத்துக்கு 2 கின்னஸ் சாதனை சான்றிதழ்கள் கிடைத்துள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டில் உயரமான சுவர் ஏறும் சாகச அரங்கம் மற்றும் உள்ளரங்கத்தில் ‘ஸ்கை டைவிங்’ செய்யும் வசதிகளுடன் பிரமாண்ட கட்டுமானம் யாஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக ‘பிளைட் சேம்பர்’ எனப்படும் ‘ஸ்கை டைவிங்’ உள்ளரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதுதான் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் இடமாகும். இதில் காற்று மூலம் மனிதர்களை மிதக்கச்செய்யும் கண்ணாடி கூண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள ஸ்கை டைவிங் உள்ளரங்குகளில் இது பிரமாண்டமானதாக உள்ளதாலும், அங்கு மலையேறும் பயிற்சி போல் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள 138 அடி உயரமுள்ள சுவர் ஏறும் சாகச பகுதிக்கும் கின்னஸ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.