அமெரிக்காவின் மரணப்பள்ளத்தாக்கு எனப்படும் மொஜாவோ பாலைவனத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
கலிபோர்னியாவில் உள்ள இந்தப் பாலைவனத்தில் மிகக் குறைவான அளவு மக்களே வசிக்கின்றனர். இங்குள்ள தானியங்கி அமைப்பு மூலம் தினசரி வெப்பநிலை பதிவு செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 17ம் தேதி அப்பகுதியில் 132 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனை அங்கு சுற்றுலா சென்றவர்கள் படம் பிடித்துக் கொண்டனர். இந்தப் பள்ளத்தாக்கில் கடந்த 1931ம் ஆண்டு அதிகபட்சமாக 134 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.