வட கொரியாவில் எட்டு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக, மிகவும் முக்கியம் என, மர்மமான விஷயங்கள் குறித்து அந்த நாட்டு தலைவர் கிம் ஜோங் உன், கட்சிக் கூட்டத்தை நடத்தி உள்ளார்.
கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலை குறித்து பல தகவல்கள் உலவும் நிலையில், கொரிய புரட்சியை நிலைநிறுத்துவதுடன், கட்சியின் போர்க்குணத்தை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து அவர் இந்த கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வட கொரிய விளைநிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
கிம் ஜோங் உன்னிற்கு உடல் நிலை சரியில்லை என கூறப்படுவதால், அடுத்த தலைவர் யார் என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
அணுஆயுதம் தொடர்பாக டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையும் முடிவு பெறாமல் இருக்கும் நிலையில், அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து போர்ப்பயிற்சிகளை மேற்கொள்வதும் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.