சவூதி அரேபிய பட்டத்து இளவரசரிடம் மன்னிப்பு கேட்க சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வாவுக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவமானப்படும் நிலை உருவானது.
காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சவூதி அரேபியா நிராகரித்ததால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குறைஷி, சவூதி அரேபியாவை விமர்சித்து பேசினார்.
இதனால் இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்ட நிலையில், மன்னிப்பு கேட்க ராணுவ தளபதியை பிரதமர் இம்ரான் கான் அனுப்பி வைத்தார். அவரை பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் சந்திக்க மறுத்த பின்னர், சவூதி துணை பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
எனினும், பாகிஸ்தான் உறவை அலட்சியப்படுத்தி உள்ள சவூதி அரேபியா, பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பயணம், ராணுவ விவகாரங்கள் தொடர்பானது மட்டுமே என்று கூறி அவமதித்துள்ளது.