ஆஸ்டிராய்ட்ஸ் எனப்படும் விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து போவது சாதாரண நிகழ்வாகும்.
ஆனால் 3 முதல் 6 மீட்டர் வரை மட்டுமே நீளமுள்ள 2020 QG என்ற மிகச்சிறிய விண்கல், இந்தியப் பெருங்கடலின் தென்பரப்பிறகு மேலே 2 ஆயிரத்து 950 கிலோ மீட்டர் உயரத்தில் பூமிக்கு மிக அருகில் கடந்த வாரம் கடந்து சென்று விண்வெளி ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பூமிக்கு அருகே வரும் விண்கற்களின் வரலாற்றில் இது ஒரு சாதனை என தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள், 45 டிகிரி அளவுக்கு சாய்வாக இந்த விண்கல் வந்ததால் அது பூமியின் காற்றுமண்டலம் மற்றும் புவியீர்ப்பு சக்தியால் எரிந்து விடாமல் கேமராவில் பதிவானதாக கூறியுள்ளனர்.
பல சிறிய விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழையும் போதே எரிந்து சாம்பலாகும் நிலையில் இது போன்ற சில அபூர்வமான விண்கற்களும் பூமியை எட்டி பார்ப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.