கொரோனா தடுப்பு மருந்து கிடைத்தால் ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து தயாரித்துள்ள அஸ்ட்ராசெனேக்கா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு ஓர் உடன்பாடு செய்துள்ளது.
தடுப்பு மருந்து சோதனை வெற்றிபெற்றால், அதை உள்நாட்டில் தயாரித்து இரண்டரைக் கோடி மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.