விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டுஇ உலகம் முழுக்க வாழும் இந்து மக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி பூஜை செய்வது வழக்கம் . பக்ரைன் நாட்டிலும் 4 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். 2010- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 9.8 சதவிகித இந்துக்கள் இந்த குட்டி நாட்டில் வசிக்கின்றனர். இதனால்இ அந்த நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டி வருகிறது. மார்கெட்டுகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பக்ரைன் தலைநகர் மனமாவின் புறநகர் பகுதியாள சூஃபைர் என்ற இடத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த சூப்பர் மார்கெட்டுக்கு வந்த பெண்கள் இருவர் அங்கு விற்பனைக்கு விநாயகர் சிலைகளை கண்டு கோபமடைந்தனர். அதில்இ ஒரு பெண் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கோபத்துடன் எடுத்து தரையில் போட்டு உடைத்தார்.விநாயகர் சிலைகளை அந்த பெண் உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலனாது. இதையடுத்து, விநாயகர் சிலைகளை உடைத்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்இ “சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ குறித்துஇ பக்ரைன் போலீஸ் ஆய்வு செய்தது. வீடியோவில் 54 வயதான பெண் ஒருவர் வேண்டுமென்றே சிலைகளை சேதப்படுத்தியது உறுதி படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுஇ விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். மத துவேசத்தை பரப்பும் செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்ரைன் போலீஸ் எடுத்த நடவடிக்கைக்கு இந்திய தூதரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பக்ரைன் நாட்டின் மத சகிப்புத்தன்மையை எடுத்துக் காட்டும் விதத்தில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் சொல்லப்பட்டுள்ளது.
பக்ரைன் மன்னரின் ஆலோசகரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான காலித் அல் கலீஃபா தன் ட்விட்டர் பதிவில் இ'அந்த பெண்ணின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. மத துவேஷத்தை பரப்புவது பஹ்ரைன் மக்களின் இயல்பு அல்ல.. பக்ரைனில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்கின்றனர் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
பக்ரைன் இஸ்லாமிய நாடாக இருந்த போதிலும் அனைத்து மதங்களை சேர்ந்த மக்கள் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அந்த நாடு அனுமதியளித்துள்ளது. கடந்த 2019 -ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பக்ரைனுக்கு சென்ற போது இ அங்குள்ள கிருஷ்ணா கோவிலை புணரமைக்க இந்திய அரசு தரப்பில் 4.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கேடோ நிறுவனம் தொகுத்துள்ள 2019 தனி மனித சுதந்திரக் குறியீட்டில்இ பக்ரைன் 162 நாடுகளில் 95- வதுஇடத்தை பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு 96- வது இடம்