ஏராளமான காடுகள் வண்டுகளால் அழிக்கப் படுவதால், பல நாடுகளில், மர வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெல் மணி அளவே உள்ள மலை வண்டுகளால், கனடாவில் உள்ள British Columbia வில் மட்டும் 90 லட்சம் மர வீடுகள் கட்டத் தேவைப்படும் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால், இங்கிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மரக்கட்டைகளின் அளவு கணிசமாக குறைந்ததால், அங்கு வீடுகளின் கட்டுமானம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
வழக்கமாக, மலை வண்டுகள் குளிர்காலத்தில் தானாக அழிந்து வந்த நிலையில், பருவ நிலை மாற்றத்தால், குளிர் காலத்திலும் வெயிலின் தாக்கம் குறையாததால், இவை அதிகளவில் பெருகி, கனடா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கோடிக்கணக்கான மரங்களை அரித்து வருகின்றன.