கொரோனாவால் தாய்லாந்தின் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய வருடாந்திர சரிவை சந்தித்துள்ளது.
கொரோனாவால் வெளிநாட்டு பயணியர் வருகை முற்றிலுமாக நின்று விட்டதாக தாய்லாந்தின் அரசு திட்ட முகமை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 4 கோடி வெளிநாட்டுப் பயணிகள் வந்த நிலையில், இந்த ஆண்டு 67 லட்சம் பேர் மட்டுமே வந்துள்ளனர்.
ஏற்றுமதி, தனியார் முதலீடு, நுகர்வுத் திறன் ஆகியனவும் கணிசமாக குறைந்து விட்டன. பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், பாதிக்கப்பட்ட அனைத்து பிரவினருக்கும் உதவவும் இந்த மாதம் கூடுதல் நிதியுதவித் திட்டங்கள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டிற்கு காலாண்டு பொருளாதார வளர்ச்சி சரிவதுடன், 2014 ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பிறகு மிகப்பெரிய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை சந்திக்கும் நிலைக்கும் தாய்லாந்து அரசு தள்ளப்பட்டுள்ளது.