வெளிநாடுகளில் இருந்து இத்தாலிக்கு வருவோருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இத்தாலியில் கொரோனா தொற்றால் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் விடுமுறைக்காக வெளிநாடுகளில் இருந்து வருவோர் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாததால் கொரோனா பாதிப்பு அண்மையில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை தடுக்கும் வகையில், ஸ்பெயின், கிரீஸ், குரோஷியா, மால்டா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரோம் நகரின் ஃபியமிசினோ விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வரவேற்கப்பட்டனர்.
அவர்களுக்கு மூக்கு மற்றும் தொண்டை மாதிரிகள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவுகள் வெளிவரும்வரை சுய தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.