பிரேசிலின் போர்டோ வெல்ஹோ நகரையொட்டிய அமேசான் காடுகளில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீக்கு எதிராக அப்பகுதிவாசிகள் போராடி வருகின்றனர்.
அமேசான் மழைக்காடுகளை அச்சுறுத்தி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் பிரேசில் ராணுவத்தினரும் தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ரோண்டோனியா மாநிலத்தில் காட்டுத்தீ காரணமாக வீடுகள் பல சேதமடைந்தன.
இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் ஏற்பட்ட காட்டுத்தீ எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒத்து உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழைக்காடுகளில் தீ என்பது ஒரு இயற்கையான நிகழ்வு என்ற போதிலும், பொருளாதார பலன்களுக்காக மனிதர்கள் வேண்டுமென்றே காடுகளுக்கு தீவைத்து அழிப்பதாகவும் கடந்த ஆண்டு ஜூலை முதல் 12 மாதங்களில் காடுகள் அழிப்பு 34 புள்ளி 5 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிதுதுள்ளனர்.