பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தின் மேற்கூரை, கனமழை காரணமாக படிப்படியாக இடிந்து விழும் காட்சி வெளியாகி உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டும் முதல் செயல்பட்டு வரும் விமான நிலையத்தில், கடந்த சில நாட்களாக மழை நீர் கசிந்து ஆங்காங்கே தேங்கியதால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், விமான நிலையம் தவறாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், அதை உறுதிபடுத்தும் விதமாக புறப்பாட்டு பகுதியில் உள்ள மேற்கூரைகள் அடுத்தடுத்து பெயர்ந்து விழுந்தன.
இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய பல்வேறு தீர்வுகள் பரிசீலனையில் உள்ளதாக பாகிஸ்தான் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.