அமெரிக்காவில் சீனாவின் அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தடை விதிப்பது பற்றிப் பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் செயல்பாட்டைத் தொண்ணூறு நாட்களுக்குள் விற்றுவிட வேண்டும் எனச் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலிபாபா உள்ளிட்ட சீனாவின் மற்ற நிறுவனங்களின் செயல்பாட்டையும் அமெரிக்காவில் தடை செய்வது பற்றிப் பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சீனாவில் இருந்து பெருமளவில் மக்காச்சோளம், சோயாபீன் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. ஜோ பிடன் அதிபரானதும் அமெரிக்காவில் வணிகத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் எனச் சீன நிறுவனங்கள் கனவு காண்பதாகவும் அது ஒருகாலும் நடக்காது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.