பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் இருந்ததாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பிரேசிலின் முன்னனி இறைச்சி ஏற்றுமதி நிறுவனமான Aurora நிறுவனத்தில் இருந்து சீனாவின் Shenzhen மாகாணத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியின் மாதிரிகளை சுங்கத்துறையினர் பரிசோதனை செய்த போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரேசிலை சேர்ந்த 6 நிறுவனங்களுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது.