ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி, பிரேசிலில் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தயாரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், அதை பிரேசில் மற்றும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் தயாரிக்கவும் விநியோகிப்பதற்காகவும் ரஷ்யாவுடன் டெக்பார் என்ற பிரேசில் தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது.
இந்த நிலையில் பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டளார் அனுமதி வழங்கும் பட்சத்தில் கொரோனா தடுப்பூசிக்கான 3ம் கட்ட பரிசோதனையில் ரஷ்யாவுடன் பங்கேற்க உள்ளதாக டெக்பார் நிறுவனம் தெரிவித்துள்ளது.