கொரோனா பாதிப்பு காரணமாக இங்கிலாந்து பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி இரண்டாவது காலாண்டு நிலவரப்படி 21 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்துள்ளது.
ஏராளமான தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்கள், சேவைகள், கட்டுமானப் பணிகள் போன்றவை கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன. இதனால் மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையை அந்நாடு எதிர்கொண்டிருப்ப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய புள்ளிவிவரங்கள் மிகக் கடினமான காலத்தை நாம் எதிர்கொண்டிருப்பதை உறுதி செய்கின்றன என்று இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனாக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த சோதனைக் காலத்தை கடந்து விடுவோம் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.