அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போடியிட ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
வரும் நவம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடும் நிலையில், பிரச்சாரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்து வரும் கமலா ஹரிஸ் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பிடன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பயமில்லா போராளி மற்றும் மக்களுக்கான சிறந்த சேவகரான கமலா ஹாரிசை துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவின், தற்போதைய செனட்டர் ஆன கமலா ஹாரிசின் தாயார் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது .