உலகம் முழுவதும் சுமார் 400 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதமாவது தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் உலகம் முழுவதும் 5-ல் 2 பேர் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் மற்றும் சோப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
400 கோடி மக்கள் வருடந்தோறும் ஒரு மாதத்திலாவது கடுமையான தண்ணீர் பற்றாக்குறையைச் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் நீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய பேரழிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.