சீனாவின் கேன்சைனோ பயாலஜிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட கிளினிகல் சோதனை சவூதி அரேபியாவில் சுமார் 5000 பேரிடம் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
சீன ராணுவ ஆய்வு பிரிவுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் இறுதிக் கட்ட சோதனையை நடத்துவதற்காக ரஷ்யா, பிரேசில், சிலி மற்றும் சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரசின் மரபியல் கூறுகள் அடங்கிய இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாகவும் அதன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவில் ரியாத், தமாம்,மக்கா ஆகிய நகரங்களில் சோதனை நடக்கும் என சுகாதார அதிகாரிகள் கூறியதாக அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.