டிக்டாக்குடன் ஒப்பந்தம் செய்வது மைக்ரோசாப்ட்டுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டிக்டாக்கை விற்பது குறித்து அதன் தாய் நிறுவனமான பைட் டேன்ஸ் (ByteDance) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள பில் கேட்ஸ், அவ்வாறு செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் ஒரு விஷ கோப்பை என்றார். என்கிரிப்சன் பிரச்னை (encryption issue) நீடிக்கும் நிலையில் சமூக இணையதளத்தை பராமரிப்பது மிகவும் எளிதான காரியமில்லை எனவும் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.