சர்வதேச பயண கட்டுப்பாட்டை அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு தளர்த்திய போதிலும், பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்கவில்லை.
கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, அமெரிக்கர்களுக்கு மார்ச் 19இல் அந்நாட்டு வெளியுறவுத்துறை 4ம் நிலை பயண எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. அதில் சில தளர்வுகளை கொண்டு வந்து அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பெயர்கள் தடை பட்டியலிலேயே நீடிக்கின்றன. கொரோனா காரணத்தினால் இந்தியாவுக்கு அமெரிக்கர்கள் பயணிக்க வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.