குழந்தைகள் கொரோனா நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய வீடியோவை தவறான தகவல் கொண்டவை என கூறி பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் நீக்கி உள்ளன.
செய்தி நிறுவனம் ஒன்றின் நேர்காணலின் போது பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், குழந்தைகள் கிட்டதட்ட கொரோனா நோயெதிப்பு சக்தி கொண்டவர்கள் என்றும் அவர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு அமைப்புகள் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்பின் அதிகாரப் பூர்வ பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த இந்த வீடியோ தவறான தகவலை கொண்டிருப்பதாக கூறி பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. மேலும் இந்த வீடியோவுடன் ட்ரம்ப் பிரச்சாரக்குழு பதிவிட்ட ட்வீட்டை நீக்க உத்தரவிட்ட ட்விட்டர் நிறுவனம், 12 மணி நேரம் ட்வீட் செய்ய இடைக்கால தடை விதித்தது.