இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 225 இடங்களில் 196 பேரை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க உள்ளனர். மீதமுள்ள இடங்கள் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் அடிப்படையில் விகிதாச்சார முறையில் நிரப்பப்படும்.
இன்று நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா, ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் சக்தி என மும்முனை போட்டி உள்ளது.
கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தாலும் சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் என பல்வேறு கெடுபிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.