ஒலிம்பிக் சாம்பியன் கேட்டி லெடெக்கி, ஒரு கிளாஸ் பாலை தலையில் வைத்து ஒரு துளிக் கூட சிந்தாமல் தண்ணீரில் நீச்சலடித்து அசத்தி உள்ளார்.
15 உலக சாம்பியன் பட்டம் மற்றும் ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்றவர் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடெக்கி. இவர் சாக்லெட் பால் நிறைந்த கிளாஸை தலையில் வைத்து, ஒரு துளி பால்கூட கீழே சிந்தாமல் நீச்சல் குளத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு நீச்சலடித்து சென்றார்.
இந்த வியக்கவைக்கும் வீடியோவை கேட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இணையத்தில் வைரலாகி உள்ளது.